புதுடெல்லி:

குடியரசு தலைவர் விருது பெற இளம் அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரி மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் மொழி இடம்பெறவில்லை.


மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை விளம்பரத்தில், சமஸ்கிருதம்,பாலி, பிரக்ரிட், அராபிக், பெர்சியன், ஒரியா,கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் மகர்ஷி பத்ராயன் வியாஸ் சம்மான் ஆகியவற்றில் புலமை பெற்ற இளம் அறிஞர்களிடம் இருந்து குடியரசுத் தலைவரின் விருதுக்காக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வரும் ஜுன் மாதம் 15-ம் தேதி கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. தமிழ் மொழி விடுபட்டுப் போனதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.