ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டநிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்தில் சந்தனபள்ளி டோல்கேட் அருகே கடந்த மாதம் 7 ம் தேதி (புதன் கிழமை) அந்த வழியாக வந்த இரு சக்கரவாகனத்தில் வந்த பிரியங்கா ரெட்டி என்ற இளம் மருத்துவரின் வாகன டயரை பஞ்சராக்கி, அவருக்கு உதவி செய்துபோல நடித்து, இந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, பின்னர் கொலை செய்து, தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொடூர கொலை சம்பந்தமாக, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையில் இறங்கிய தெலுங்கானா போலீசார், முகமது ஆரிப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு என நான்கு பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் 4 பேரை தூக்கிலிட வேண்டும் என்றும் ஓடவிட்டு சுட வேண்டும் என்றும் கூறி வந்தனர். பாராளுமன்றத்திலும் பெண் எம்.பி.க்கள் ஆவேசமாக கருத்துக்களை பதிவிட்டனர்
இந்த நிலையில், குற்றவாளிகள், அந்த நான்கு பேரையும் குற்றம் எவ்வாறு நடந்தது என்றே விசாரிப்பதற்காக சம்பவம் நடந்த அந்த சந்தனபள்ளி டோல்கேட் அருகே அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. காவல்துறையினருக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்கி வந்த நிலையில், அதி காலை 4.50 மணி அளவில், சற்றே வாகன போக்குவரத்து அதிகரித்த நிலையில், நிலைமையை சாதகமாக்கி குற்றவாளி ஒருவன் காவலர் ஒருவரிடம் இருந்து துப்பக்கியை பிடுங்கிக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதன்மூலம் 4 பேரும் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.
அதை போலிசார் தடுக்க முயன்றபோது, குற்றவாளி துப்பாக்கியால் சுட முயன்றதால், காவல்துறையினர் அவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளி உள்ளனர். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். சிலருக்கு நெற்றியிலும் சிலருக்கு வயிற்றிலும் குண்டு பாய்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் காலை 6 மணிக்குள் முடிவடைந்து விட்டது.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர், பாதுகாப்பு கருதி தான் 4 பேரையும் என்கவுண்டரில் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளனர்.
ஐதராபாத் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோன்று ஒவ்வொரு மாநில காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி தேசிய தலைநகரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள டி.சி.டபிள்யூ தலைவர் சுவாதி மாலிவால், ” கற்பழிப்பாளர்கள் தப்பிக்க முயன்றால் காவல்துறை என்ன செய்யும்? ” என்பதை நிரூபித்துள்ளது.
நிர்பயாவின் (2012 டிசம்பரில் ஐந்து பேரால் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட துணை மருத்துவர்) தாய் ஆஷா தேவி, ” எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் தெலுங்கானா மருத்துவர் கற்பழிப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் போலவே தண்டிக்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
[youtube-feed feed=1]