bufferingயு டியூப் இணையத்தளம் இன்றைக்கு தவிர்க்க முடியாத இணையதளமாக உருவெடுத்துள்ளது. நமக்கு ஏதாவது டவுட் என்றால், நம் சந்தேகத்தை தீர்த்தது வைக்கும் அளவிற்கு தவிர்க்க முடியாத இணையதளமாக விளங்குகின்றது. ஆனால் பலருக்கு யு டியூப் வீடியோவை பார்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. இன்டர்நெட் கனெக்க்ஷன் வேகம் குறைவாக உள்ளபோது, யு டியூப் வீடியோவை பார்த்தால் வீடியோ பஃபர் ஆகும். இதனை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம்.

உங்கள் கணினியில் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் அல்லது கூகுள் க்ரோம் புரவுசர்களில் SmartVideo என்கிற எக்ஸ்டென்ஷனை பதிவேற்றம் செய்யுங்கள். அந்த எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் ஆனவுடன், யுடியூப் இணையதளம் சென்று நமக்கு தேவையான வீடியோக்களை ப்ளே செய்யவேண்டும். உங்கள் மவுசை வீடியோவின் பக்கம் கொண்டு சென்றவுடன், அதில் Global Preferences என்ற ஆப்ஷன் காட்டும். அதை தேர்வு செய்தால் எந்த வித தடையும் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம்.