வெயில்காலத்தில் நமக்கு அடிக்கடி தாகம் எடுத்திருக்கும், ஆனால் கடும்கோடையில் நம் உடலில் நீர்சத்து அதிகமாக இழப்பு ஏற்படும். எனவே கோடைக்காலங்களில் நம் உணவில் நீர்சத்து குறையாமல் பார்த்துகொள்ளவேண்டும்

வெயில்காலத்தில் நீர் மட்டும் அருந்தி சமாளிக்கமுடியாது. கடும்வெயிலில்  காரணமாக உடலில் கடுமையான நீரிழப்பு ஏற்படும். நீர் மட்டும் அருந்தி அதை சரிப்படுத்தமுடியாது. காரணம் உடலில் உள்ள எலெக்ட்ரொலைட்டுகள் எனப்படும் மினரல் இழப்பும் ஏற்படும். இந்த மினரல் இழப்பு திடீர் என ஏற்படுவதால் பலரும் வெயில் காலத்தில் மரணம் அடைகிறார்கள். இவர்கள் நீர் இல்லாததால் மரணம் அடையவில்லை, டிஹைட்ரேட் ஆனதால் தான் மரணம் அடைந்தார்கள்.

டிஹைட்ரேஷனை தடுக்க எலெக்ட்ரோலைட்டுகள் உள்ள உணவுகளையும், நீரையும் போதுமான அளவில் உடலில் சேர்த்துகொள்ளவேண்டும். அவை என்ன எனப்பார்க்கலாம்

பொட்டாசியம்: வியர்வையில் அதிகமாக பொட்டாசியம் இழப்பு ஏற்படுவதால் வெயிலில் பயணிக்கையில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள கார்பும் உடலில் நீரைத்தேக்கி வைக்க உதவும். கீரைகள், அவகாடோ உண்பதும் நல்லது.

பால்: பாலில் உள்ள சோடியம், கால்ஷியம் ஆகியவையும் உடனடியாக உடலுக்கு தேவையான எலெக்ட்ரோலைட்டுகளை கொடுக்கும். அதனால் வெயிலில் பயனிக்கையில் குளிர்ந்த பால் வாங்கிப்பருகவும். மோர் அருந்துவதும் இதனாலேயே சிறப்பானது

வெயிலில் வரும் களைப்பைபோக்க மக்னிசியம் கைகொடுக்கும். அதனால் மக்னிசியம் உள்ள பாதாம், கீரைகள் ஆகியவும் பலனளிக்கும்

வெயிலில் அதீத அளவில் சோடியம் இழப்பும் ஏற்படும். அதனால் உப்பு சற்று அதிகம் சேர்க்க வேண்டும். எலுமிச்சை ஜூஸ், உப்புடன் பருகுவது இதனால் கைகொடுக்கும்.

அதனால் வெயிலில் பயனிக்கையில் லெமென் ஜூஸ் உப்புடன் அருந்திவிட்டு செல்வது, பாதாமை ஸ்னாக்ஸ் ஆக கொண்டுசெல்வது, கடைகளில் காப்பி/கோக் விஷத்துக்கு பதில் பால், மோர் அருந்துவது, வாழைப்பழம் உண்பது ஆகியவை பலனளிக்கும்.

காபி/கோக்/பெப்ஸி ஆகியவை கட்டாயம் வெயில் காலத்தில் உண்ணவேகூடாது. இவை நம்மை டிஹைட்ரேட் செய்துவிடும். தாகம் தணிவது போல் இருந்தாலும் வெயில் அட்டாக் நிகழும்.

சன்ஸ்ஸ்க்ரீன் போட்டுகொள்வது ஸ்கின் கான்சர் வராமல் தடுக்கும். தலைக்கு தொப்பி முதலானவ்ற்றை அணிந்துகொள்ல்லாம். தினமும் 2 கப் மோர், 2 கப் குளிர்ந்த பால், பழம், பாதாம், லெமென் ஜூஸ் போன்றவை நம்மை ஹைட்ரேஷனில் வைத்திருக்கும். இளநீரில் ஏராளமான எலெக்ட்ரோலைட்டுகள் உள்ளன என்பதால் அதையும் பருகலாம். இயற்கை இமமதிரி நம்மை வெயிலில் இருந்து காக்கத்தானே வெயில் காலத்தில் மட்டுமே தர்பூசணி மாதிரி எலெக்ட்ரோஒலைட் நிரம்பிய பழங்களை உற்பத்தி செய்கிறது!

-செல்வமுரளி