ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்திருக்கிறது. பத்திரிகை டாட் காம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில் சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும், முக்கூட்டு கிரகங்களான சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகியவை மாதம் ஒரு முறையும், செவ்வாய் ஒன்றரை மாதத்திற்க்கு ஒருமுறையும் குரு வருடத்திற்கு ஒரு முறையும் ராகுவும் கேதுவும் ஒன்றை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயற்சியாகும். .
அதேபோல தமிழ் ஆண்டுகள் பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய 60வது ஆண்டில் முடியும். இந்த வரிசையில் 31வது ஆண்டின் பெயர் ஹேவிளம்பி ஆகும்.
இந்த ஆண்டில் குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
திருக்கணித பஞ்சாங்கபடி இந்தாண்டு குருபெயற்சி ஆவனி மாதம் 27ம் தேதி (12-09-2017) செவ்வாய்கிழமை காலை 6.51மணிக்கு சூரிய உதயாதி நாழிகை 2.04 அளவில் குருபகவான் கன்னி ராசியிலிருந்நு துலா ராசிக்கு பெயர்சியாகிறது.
சனி பெயற்சியானது ஆனி மாதம் 6ம்தேதி ((20-06-2017) செவ்வாய்கிழமை இரவு 4.38 மணிக்கு சூரிய உதயாதி நாழிகை 57.07 அளவில் அதிசாரத்தில் தனுர் ராசியில் உள்ள சனி பகவான் வக்ர கதியில் விருச்சிக ராசிக்கு பெயற்சியாகிறது. மறுபடி ஐப்பசி மாதம் 9ம் தேதி ( 26-10-2017) வியாழக்கிழமை பிற்பகல் 3.28 மணிமணிக்கு சூரிய உதயாதி நாழிகை 23.28 அளவில் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுர் ராசிக்கு பெயர்சியாகிறது.
ராகு – கேது பெயர்ச்சி அதேபோல ராகு-கேது இந்தாண்டு ஆவணி மாதம் 1ம் தேதி (17-08-2017) வியாழக்கிழமை இரவு 2.32 மணிக்கு சூரிய உதயாதி நாழிகை 51.20 அளவில் ராகு பகவான் சிம்மராசியிலிருந்து பின்னோக்கி கடக ராசிக்கும் கேது பகவான் கும்பராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ந்து செல்கின்றன.
இதன் பலன்கள் என்ன?
பொதுவாக பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கி மற்றும் நிறுவனங்கள் வட்டி விகித்த்தை குறைப்பதோ, தள்ளுபடி செய்வதோ நடக்கும். ஆகவே மக்களுக்கு பணப்பிரச்சினை அவ்வளவாக இருக்காது.
குடும்பங்களில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதோடு, சமுதாயத்திலும் விழாக்களை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். பொருட்கள், வாகனங்கள் சேரும்.
அதே நேரம் நோய் நொடி அதிகரிக்கும். ஆகவே தற்காப்பு நடவடிக்கை அவசியம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், வாயுத்தொல்லை உள்ளவர்கள் தங்களது உணவு மற்றும் மருத்துவ விசயங்களில் கூடுதல் விழிப்புடன் இருப்பது நல்லது.
இந்த வருடத்தில் உலகின் சில பகுதிகளில்பூகம்பங்கள், , புயல், சூராவளி, வெளஅளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு மக்களை வாட்டும் வாய்ப்பு உண்டு.
ஆனாலும் இந்த இயற்கைச் சீற்றங்களை மனித வர்க்கம், சிறப்பாக கையாண்டு மனித, பொருள் இழப்புகளை தடுக்கும் முயற்சியில் திறம்பட செயல்படும்.
அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். பல நாடுகளில் ஆட்சியில் குழப்பங்கள் பிரச்சினைகள் தோன்றும். ஏற்கெனவே பிரச்சினையில் உள்ள நாடுகளில் பிரச்சினை தீவரமாகும். அதே நேரம் வருட இறுதியில் இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும்.
இப்படி இயற்கைச் சீற்றம், அரசியல் மாற்றம் என்று பலவித நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றை துணிவுடன் மக்கள் எதிர்கொள்வர். தங்கம் விலை சற்று குறையும். அதோடு பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்பதால், பலரும் தங்க நகைகளில் முதலீடு செய்வார்கள்.