2018 ம் ஆண்டு ரஷ்யா-வில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியை மொத்தம் சுமார் 357 கோடிக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்படுகிறது.
உலக மக்கள்தொகையில் பாதிபேர் கால்பந்து ரசிகர்களாக இருந்து வருகின்றனர். பிரான்ஸ் – குரோஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியை மட்டும் 110 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தனர்.
கோடிகளை அள்ளிக் கொடுக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இம்முறை மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெறுகிறது.
5 நகரங்களில் 8 மைதானங்களில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்குபெறுகிறது.
கோப்பை வெல்லும் அணிக்கு மட்டும் ₹340 கோடி கிடைக்கும்.
இரண்டாவது இடத்திற்கு ₹245 கோடி
மூன்றாவது இடத்திற்கு ₹220 கோடி
நான்காவது இடத்திற்கு ₹204 கோடி
5 முதல் 8வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹138 கோடி
9 முதல் 16வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹106 கோடி
17 முதல் 32வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹73 கோடி
என மொத்தம் சுமார் ₹3,590 கோடி பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
உலகில் அதிக தொகையை பரிசாக கொடுக்கும் போட்டி இதுதான்.
இதனை அடுத்து, யுஎஸ் ஓபன் டென்னிஸில் ₹498 கோடி
விம்பிள்டனில் ₹399 கோடி
பிரெஞ்சு ஓபனில் ₹380 கோடி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ₹45 கோடி மொத்த பரிசுத்தொகை ஆகும்.
உலக கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு தயாரானது கத்தார்… வீடியோ…