ஆஸ்திரேலியா-வில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.

இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி என்றால் அதற்கு தனி மவுசு உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிகொண்டது.

மிகவும் திரில்லிங்காக இருந்த போட்டியின் கடைசி இரண்டு ஓவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியை மாற்றியது.

அதற்கு காரணம் விராட் கோலி அடித்த சிக்ஸர்கள் தான். இதனை ஐசிசி-யும் கூறியுள்ளது.

டி-20 போட்டிகளின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஐ.சி.சி. விராட் கோலி-யை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

அது ஒரு அற்புதமான ஷாட் என்றபோதும் போட்டி சூழ்நிலையைப் பொறுத்தவரை, அது அசாதாரணமானது; டி-20 வரலாற்றில் மிகச் சிறந்த ஷாட் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா… கோலி அபாரம்