மதுரை: தமிழகத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது?  என  உயர்நீதி மன்றம் மதுரை கேள்வி எழுப்பி உள்ளது.

விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்த கிசான் திட்ட த்தில்,  தமிழகத்தில் மாபெரும் முறைகேடு  நடைபெற்றுள்ளது. குறிப்பாக 14 மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் பணம் வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் தமிழக வேளாண்துறை மூலமாக முதற்கட்டமாக 25 லட்சம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கிகள் மூலம் நிதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தொய்வு இருப்பதாக எண்ணிய மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. அந்த திருத்தங்கள் தான் முறைகேட்டிற்கு வழி வகுத்து விட்டதாக தெரிவிக்கின்றனர் விவசாய சங்க நிர்வாகிகள்.

2019, மே மாதம், ‘கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதிலாக, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான வேளாண்மை அதிகாரிகளே பயனாளர்களைத் தேர்வு செய்யலாம்’ என்று விதிமுறை திருத்தி அமைக்கப்பட்டது. இதனை அடுத்து வேளாண்மை அதிகாரிகள் பலரும், ஆதார் மற்றும் குடும்ப அட்டையுடன் தலைக்கு 500 ரூபாய் கமிஷன் கொடுத்தால், ஆறாயிரம் ரூபாய் பெற்று தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.  விவசாயி என்றப் பெயரில் போலி நபர்களைப் பதிவேற்றம் செய்து ஏராளமான பணத்தை முறைகேடாக பெற்றுள்ளனர்.

இந்த முறைகேட்டின் விளைவாக தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. பயனாளர்கள் எண்ணிக்கை 40 லட்சம் என அறிவிக்கப்பட்டாலும், விவசாயிகள் பெரும் அளவில் பலன் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு வலுக்க தொடங்கியது. இதையடுத்து, இந்த முறைகேடு முதன்முதலாக கடலூர் மாவட்டத்தில் வெளியவர தொடங்கியது. இதையடுத்த முறைகேடுகள் தொடர்பாக விவசாயதுறை செயலாளர் ககன்திப் சிங் பேடி, அதிரடி நடவடிக்கை எடுக்க தற்போது சந்தி சிரித்து வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக அரசின் வேளாண் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி “இது 110 கோடி ரூபாய் ஊழல்” என்றும், “மார்ச் மாதத்தில் 39 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, திடீரென்று ஆகஸ்ட் மாதத்தில் 45 லட்சமாக உயர்ந்துவிட்டது” என்றும், அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனன்றும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும்  அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கிஷான் திட்ட முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, முறைகேடு தொடர்பாக,  மத்திய அரசின் விவசாயத்துறை செயலர். தமிழக அரசின் விவசாயத்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.