சென்னை: “இன்னும் எத்தனை உயிர்கள்..? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?” – மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசு விடாப்படியாக தேர்வை நடத்தி வருகிறது. இதனால், கிராமப்புறப் மாணவர்கள்  முதல், ஏழை மாணவர்களின் டாக்டர் படிப்பு என்ற கனவு கலைக்கப்பட்டு உள்ளது. இதனால் மனம் உடைந்து பலர் தற்கொலை செய்துகொண்டு வரும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன.

ஏற்கனவே, நீட் தேர்வால் மருத்துவர் கனவு நிறைவேறாமல் அரியல் அனிதா தற்கொலை செய்த நிலையில், அடுத்தடுத்து, கோவை சுபஸ்ரீ வரை பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது, அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவன் கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இநத் நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,

“நீட் பலிபீடத்தில் மேலும் ஓர் உயிரை இழந்திருக்கிறோம்.

அரியலூர் எலந்தங்குழியில்  மாணவன் விக்னேஷ் தற்கொலை – வேதனை

இரக்கமற்ற மத்தியஅரசு எப்போது நிட் தேர்வை ரத்து செய்யும்?

மாணவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள்,  எத்தகைய சோதனைகளையும், தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்,  தற்கொலை எண்ணத்தை விடுங்கள்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.