டெல்லி; இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” என திருவள்ளுர் கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல்காந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ரயில் விபத்துகளால் ‘பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்து உள்ளார்.
கர்நாடகா மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் தமிழகம் சென்னை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது இதில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது, 2 பெட்டிகள் தீ பற்றிய எரிந்தது. 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனே மீட்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
விபத்து நடைபெற்ற இடத்தில் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தடை பட்டுள்ளது. 12 மணி நேரத்திற்கும் மேலாக கவரைப்பேட்டையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரயில் விபத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டையிலும் விபத்து நடந்துள்ளது; ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிக்க வேண்டும்?” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.