சென்னை: சென்னையில் நேற்று பெய்த கனமழையால், மீண்டும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து, போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும், சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், மழைநீரை அகற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஓரளவுக்கு மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று மாலை 4மணி அளவில் சென்னையில் போக்குவரத்து நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்த போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Patrikai.com official YouTube Channel