உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ‘காவு’ வாங்கியிருக்கும் கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 18 அமைப்புகளில் இரண்டு மட்டுமே இது இயற்கையாக உருவானது என்றும் ஒரு அமைப்பு இது ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. இருந்தபோதும் அவர்களின் கூற்றை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை.
இந்த நிலையில் புதிதாக விசாரணையை தொடஙக உள்ள அமெரிக்க புலணாய்வு அமைப்பிற்கு சீனா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வுகான் ஆய்வு மையத்தில் ஏற்கனவே நடத்திய விசாரணைக்கு சீனா முழு ஒத்துழைப்புடன் போதுமான தகவல்களை அளிக்கவில்லை என்று அமெரிக்கா குறைகூறியுள்ளது.
வுகான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த சிலருக்கு, வைரஸ் பரவல் தொடங்குவதற்கு முன்னரே உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ஜோ பைடனின் இந்த புதிய உத்தரவு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.