எல்லையில் பாதுகாக்கும் கிட்டத்தட்ட 30 லட்சம் இராணுவத்தினர் தங்கள் ஜனநாயக கடைமையை எப்படி நிறைவேற்றுவார்கள்?

தபால் ஓட்டுக்கள் செலுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அதை சரிசெய்யும் நோக்குடன் அமைக்கப்பட்ட கமிட்டி ஒன்று பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இணையம் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், வாக்களிக்கும் இ-போஸ்டல் பேலட் ஃபைலின் அளவு குறைந்த இணைய வேகம் உள்ள பகுதிகளிலும் எளிதாக பதிவிறக்கம் ஆவதற்கு ஏற்றாற்ப்போல சிறியதாக இருக்க வேண்டுமென்றும், வாக்களிக்கும் இராணுவத்தினருக்கு பிரத்யேக சேவை எண்கள் வழங்க வேண்டுமென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதே போன்ற இணைய வாக்களிப்பு முறை அமலில் உள்ள ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், நெதர்லாண்ட்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் வாக்களிப்பு முறைகளை ஆய்வு செய்து அவற்றுள் சிறந்த மற்றும் நமக்கு பொருந்திவரும் முறைகளை நாமும் பின்பற்றலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நெல்லி தோப்பு இடைத்தேர்தலில் இ-போஸ்டல் பாலட்டிங் முறையை பின்பற்றியதற்காக இந்த கமிட்டி வரவேற்பு தெரிவித்துள்ளது.
 
The Standing Committee on Defence has sought finalisation of procedures for online registration and one way e-movement of postal ballot for effective implementation of the system