சென்னை:
தமிழகத்தில் அடுத்த 2 தினங்கள் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 2 தினங்கள் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சில இடங்களில் இயல்பில் இருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.