ஜினி புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளது.

இந்த புதிய படமான ‘காலா’ குறித்து சமூக வலைதளங்களில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதை தொகுத்து உங்களின் பார்வைக்கு கொடுத்துள்ளோம்… நீங்களும் சுவையுங்கள்….

Stanley Rajan

என்னது கரிகாலனா? போதாதா , இப்பொழுது பொங்குவார்கள் பாருங்கள், கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை காய்ந்துகிடக்கும்பொழுது கன்னடன் படத்துக்கு கரிகாலன் பெயரா?

Thanjai Rajesh

· தலைவரின் அடுத்த படம்

# காலா

தலைப்புக்கு கீழே “கரிகாலன்” என்ற சப்டைட்டில்…

காலா என்றால் “கருப்பு” = திராவிடம்

கரிகாலன் = தமிழீழ தேசிய தலைவர்

தலைவா… தி கிரேட்

மாணிக்கம்

ஏளனம் வேண்டாம்  😊
அணைகட்டியதில் சிறிது கடன்.
அதை அடைக்கவே இந்த வயதிலும் அயராது உழைக்கிறார்… 😊
விரைவில் அவர் கடனில் இருந்து விடுபட ஆண்டவனை வேண்டுவோமாக…
ஆமென்.. 😊

#காலா…..

Jsk Gopi

#காலா என்ற பெயருக்கு:
கருப்பு,காலா(பைரவர்)காப்பவர், காலத்தை நிர்ணயம் செய்பவன், காலனை வென்றவன், இப்படி பல பெயர்களும் அர்த்தங்களும் உண்டு

Nalla Singam

· காலா பட தலைப்புக்கு தனுஷ் புது விளக்கம்:

#காலாவதியான நடிகர் ரஜினி நடிப்பதால் இந்த படத்திற்கு#காலா என பெயரிட்டதாக தயாரிப்பாளர் தனுஷ் தகவல் 😂 😂 😂

Rajini Sriraghavendra Murali 

“#காலா” கலக்கா வருகிறார்… சினிமாவில் மட்டும் அல்ல, விரைவில் அரசியலிலும்…

வெற்றி இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு மீண்டும் ஓரு முறை தலைவருடன் சேர்ந்து மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்…

#மகிழ்ச்சி…

Sara Lyk Dhanush

· “காலா” … போடா கருப்பா என்று அர்த்தம்..
வட இந்தியாவில், தென் மாநில மக்களை நிற வெறியுடன் ஏளனம் செய்ய பயன்படுத்தபடும் ஒரு வசை சொல் “காலா” இன்று இந்தியாவின் உச்சபட்ச சூப்பர் ஸ்டார் பட தலைப்பு ….
#காலா #கரிகாலன் 😡 😡 😡