சென்னை: பள்ளி மாணவியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தாம்பரம் அருகே உள்ள பள்ளி மாணவி விடுதியில் அரங்கேறி உள்ளது. இது சக மாணிவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது..

தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அந்த விடுதியின் காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை அந்த மாணவி தடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் விடுதி காவலாளி அந்த மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த மாணவி தப்பிக்கும் முயற்சியின்போது வீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அதை கண்டுகொள்ளாமல் வார்டன் அந்த மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி விடுதி காப்பாளரிடம் புகார் கொடுத்த நிலையில், அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர், விடுதி காவலாளியை கைது செய்ததுடன், கால் முறிவு ஏற்பட்ட மாணவியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு மாணவியர் விடுதியில் முறையானெ பாதுகாப்புக்கு பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என மாணவிகள் கோரி வருகின்றனர்.