ஹாங்காங் தேர்தல்: சீன எதிர்ப்பாளர் நாதன் லா வெற்றி!

Must read

ஹாங்காங் 
ஹாங்காங்கில் நடைபெற்று முடிந்த ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக சீன எதிர்ப்பாளர்கள் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். இளம் அரசியல் தலைவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஹாங்காக் சீனாவுடன் நீடிக்கவேண்டுமா என்று மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி  2014ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தியவர் நாதன் லா. இவர் தற்போது நடைபெற்று முடிந்தசட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
h 2 h 1
ஆனாலும் சீன ஆதரவாளர்களே பெரும்பாலோனோர் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பது பதிவாகியிருக்கிறது.
‘ஜனநாயக சார்பு வேட்பாளர்கள் தற்போது கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த போதுமான இடங்களை பெற்றுள்ளனர். இதன்மூலம், சீன பெருநிலப்பகுதியிலிருந்து ஹாங்காங் சுய நிர்ணயம் பெறும் சட்டத்தை தடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹாங்காங்கிற்கு சுதந்திரம் கோரி சில வேட்பாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை எதிர்த்ததாக, சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
 
 
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article