சென்னை: வங்கி அதிகாரிகள் மாநில மொழிகளில் பேச வேண்டும் என வலியுறுத்தியது சரி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனின் கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
வங்கி அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதிஇமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நாட்டின தற்போதை பொருளதாரம் குறித்து பேசினார். ஆராய்ச்சியாளர்கள் ஒரு எஃப் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர். 1936 (!) மந்தநிலை அபாயங்களுடன் இணைந்து அதிக பணவீக்கத்தின் இந்த காலங்களில் முரண்பட்ட சாத்தியக்கூறுகளை விவரிக்கின்றனர். ஆனால், கொரோனா காலக்கட்டத்தில், பல்வேறு சிக்கல்களை உலகம் முழுவதும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொண்டனர். ஆனால், நமது நாட்டு, மிகவும் கடினமான சவால்களுடன் இன்னும் செயல்படும் திறனைத் தக்க வைத்துக் கொள்கிறது. மக்கள் பணத்தை செலவழிக்க தயாராக உள்ளனர் மற்றும் பயணம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி உள்ளது.
வணிகங்கள் முதலீடு மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றைப் பார்க்கின்றன.. இவை அனைத்தும் செயல்பட, வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து, ஆற்றல் மற்றும் நேர்மறையை வெளிப்படுத்துவதன் மூலம் கடன் ஓட்டங்களை உறுதி செய்வது வங்கிகளின் மீது உள்ளது என்றவர்,
நாட்டின் அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக நடந்துகொள்ள வேண்டும் அதாவது கஸ்டமர் ஃபிரென்ட்லியாக இருப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வருவது மூலம் கடன் வாங்குபவர்களுக்குக் கடன் பெறும் செயல்முறை மிகவும் எளிதாக இருப்பது மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தை வளர்ச்சி அடைந்து, உற்பத்தி துறை மேம்பட்டு நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் .
“மொழிகளை கற்றுக்கொள்வதில் என்ன சிரமம்? என கேள்வி எழுப்பியவர், நான் தென்னாட்டில் இருந்து வந்தவள், நான் இந்தி கற்றுக்கொண்ருக்கிறேன்… நீங்களும் உள்ளூர் மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள் என்றவர், உள்ளூர் மொழி பேசாத ஏரியாவில் ஐபிஏ அதிகாரிகளை எப்படி பணியமர்த்துகிறார்கள் என்பது புரியவில்லை என்றவர், வாடிக்கையாளருக்கு என் மொழி தெரியாவிட்டால் அவரைக் கேவலமா? என்ற கேள்வி எழுப்பியவர், பிராந்திய மொழி தெரியாத வங்கியாளர்களை இந்தியில் மட்டுமே பேச வேண்டும், இந்தி தெரியாவிட்டால் அவர்களை தேசபக்தியற்றவர்கள் என்று அழைக்க முடியாது என்றும் காட்டமாக விமர்சித்தார்.
நமக்கு நாமே புதிய பிரச்சனைகளை உருவாக்க மாட்டோம் என்று நம்புகிறேன். உங்கள் ஆட்சேர்ப்பு மிகவும் புத்திசாலித்தனமாகவும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றும் இந்திய வங்கிகள் சங்கத்திடம் நிதியமைச்சர் வலியுறுத்தினர்.
நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கருத்தை முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். வங்கி மட்டுமல்ல அனைத்து சேவை நிறுவனங்களுமே பிராந்திய மொழிகளில் சேவை வழங்க வண்டும், காப்பீடு நிறுவனங்கள், தனியார் விமான நிறுவனங்கள், தொலை தொடர்பு நிறுவனங்களில் பிராந்திய மொழிகளில் சேவை வழங்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
மாண்புமிகு எஃப்.எம் வங்கிகளிடம் வாடிக்கையாளர்களுடன் கையாளும் ஊழியர்கள் கண்டிப்பாக உள்ளூர் மொழியில் பேச வேண்டும் என்று கூறியது முற்றிலும் சரி.
காப்பீட்டு நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், மொபைல் தொலைபேசி நிறுவனங்கள் போன்ற வாடிக்கையாளர் சார்ந்த வணிகங்களுக்கும் FM அதே எச்சரிக்கையை வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர் சார்ந்த ஊழியர்கள் பெரும்பாலும் ஒருமொழி பேசுபவர்களாக (இந்தி) இருப்பது எரிச்சலூட்டுகிறது.
இந்தியா பல மொழிகளைப் பேசுகிறது மற்றும் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் (இந்தி மற்றும் ஆங்கிலம்) உள்ளன என்பதை நாம் தொடர்ந்து நினைவுபடுத்த வேண்டும்.
வளரும் நாடுகள் உணவுப் பாதுகாப்பு, எரிபொருள் பாதுகாப்பு, உரம் ஆகியவற்றில் அக்கறை காட்டுவதால் இது போருக்கான நேரம் அல்ல என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறியது முற்றிலும் சரி.
அதை இந்தியாவுக்குப் பொருத்தி, இந்திய மக்கள் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வகுப்புவாத மோதல்களில் அக்கறை கொண்டுள்ளதால், துருவமுனைப்பு மற்றும் பிரிவினைக்கான நேரம் இதுவல்ல என்று மாண்புமிகு பிரதமரிடம் யார் கூறுவார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.