புதுடெல்லி: உலகளவில் வீடுகள் விலை அதிகரிப்பில், 54வது இடத்திற்கு இந்தியா சரிந்துவிட்டதாக, சொத்து ஆலோசனை நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; மொத்தம் 56 நாடுகள் கொண்ட பட்டியலில், ஜூன் காலாண்டில் ஏற்பட்ட 2% சரிவு காரணமாக, இந்தியாவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்தியா, அப்பட்டியலில் 43வது இடத்தில் இருந்தது. தற்போது, 2% சரிவானது, இந்தியாவை 11 இடங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஒருநாட்டில் உள்ள முக்கிய இடங்களில், வீடுகளின் விலை கணக்கில் கொள்ளப்பட்டு, அதன்மூலம் பட்டியலில் இடம் வழங்கப்படுகிறது.
இப்பட்டியலில், முதல் 10 இடங்களில் ஐரோப்பிய நாடுகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.