மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு மதுரை வருகிறார். தொடர்ந்து நாளை காலை மதுரை மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்க உள்ளார். இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் நாளை (ஜுன் 8) பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜுன் 7) மதுரை வருகை தருகிறார். அதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 8.30 மணியளவில் மதுரை வருகிறார். இரவு மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இரவு தங்குகிறார்.
நாளை (ஜுன் 8) காலை அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி, விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை செய்யபடுகிறது. மேலும், வெடிகுண்டு தடுப்பு போலீசார் மூலம் விமான நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெறுகிறது.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு! மக்களிடையே அதிருப்தி…