டில்லி:

ராணுவ அமைச்சகத்தை தொடர்ந்து உள்துறை, சட்டம், தொழிலாளர் நலத்துறை, இளைஞர் நலன் துறை இணைய தளங்களும் முடக்கப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தை மர்ம ஆசாமிகள் இன்று முடக்கினர். இதனால் இணையதளம் முற்றிலும் செயலிழந்தது. அதில் சீன மொழி வார்த்கைகள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டையே பெரும் அதிர்ச்சிகுள்ளாக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய அரசின் மேலும் சில அமைச்சக இணைய தளங்கள் முடக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை, சட்டம், தொழிலாளர் நலன், இளைஞர் நலன் ஆகிய துறைகளின் இணைய தளங்களையும் மர்ம ஆசாமிகள் முடக்கியுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.