ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துவரும் ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க இதில் சுனில் ஷெட்டி, ப்ரதீக் பப்பார், தலிப் தஹில், யோகி பாபு, ஆனந்த ராஜ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.
தர்பார் படத்தில் ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கதாபாத்திரம் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என்று படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான பில் ட்யூக் கோரிக்கை ட்விட்டரில் tag செய்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
எனக்கு தமிழ் தெரியாது ஆனால் என்னால் ரஜினிகாந்தின் அமெரிக்க உறவினராகவோ, நயன்தாராவின் மாமாவாகவோ இருக்க முடியும். உங்களுக்கு தெரியுமா அனைவரும் என்னால் நடிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.ஸ்ரீகர் பிரசாத்தும், சந்தோஷ் சிவனும் நான் நடித்த காட்சிகளை நன்றாக எடிட் செய்ய முடியும். அனிருத் கூட உலகம் முழுவதும் புகழும் அளவில் ஹிட் பாடல் குடுக்க முடியும் … இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “சார். நிஜமாகவே நீங்கள் தானா” என்று அவரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்