சென்னை
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிப்பால் ஜனவரி 31 வரை கல்லூரிகள் மற்றும் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் நேற்று தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளது. எனவே வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் பொது பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பை முன்னிட்டு தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் மட்டுமே நடைபெற உள்ளன.
மேலும் ஊரடங்கு நீட்டிப்பை முன்னிட்டு அனைத்துக் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அது ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]