ஐதராபாத்

வரும் 29 மற்றும் 30 தேதிகளில் ஐதராபாத் நகரில் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காகக்  கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வரும் 30 ஆ தேதி அன்று தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்குத் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஐதராபாத்தில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் மாவட்ட ஆட்சியர் அனுதீப் துரிஷெட்டி,

“நவம்பர் 30 அன்று தெலங்கானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் ஐதராபாத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 1-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும்

எனக் கூறியுள்ளார்.

தெலுங்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.