சென்னை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது..  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.. தெற்கு வங்கக்கடலில் இன்று உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.  இதனால் 10,11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக அதி கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாகச் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்..இன்று 16 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கனமழை காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

வடக்கு கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைப் போல். நாகை, விருதுநகர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மயிலாடுதுறை மாவட்டத்திலும் கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.