சேலம்: 
கேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்குத் தமிழகம் மட்டும் அல்லாமல், இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வந்து  செல்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஒகேனக்கலுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.  கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தளர்த்தப்பட்ட பிறகு பிற மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத்  தலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கியது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]