ஆசியகோப்பை மகளிர் ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

Must read

சிங்கப்பூரில் நடந்த 4-வது ஆசியகோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அனி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய வீராங்கனை தீபிகா கடைசி நிமிடங்களில் அடித்த அபாரமான கோலினால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கோப்பையை வென்றது.

indian_hokey

லீக் போட்டிகளின் முடிவில் சீனா 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது, இந்தியா 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து, இதையடுத்து இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கடந்த சனிக்கிழமையன்று பரபபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி கோப்பையை முதல் முறையாக வென்றது.

More articles

Latest article