இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அன்பறிவு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ஆதி ஹீரோவாக நடிக்கிறார். காஷ்மீரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

அஸ்வின் ராம் இந்த படத்தை இயக்குகிறார். வித்தார்த், நெப்போலியன், சாய்குமார், ஊர்வசி, சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றது.