புதுடெல்லி: வியாழக்கிழமை, டெல்லியின் ஜாமியா பகுதியில் சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி, அந்த சம்பவத்திற்கு சற்று முன்பு வரை ஃபேஸ்புக் லைவ் இல் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. ஆர்ப்பாட்டக்கார்ர்களை நோக்கி சுட்டதில், ஷாதாப் என்ற மாணவர் காயமடைந்ததாகவும், பின்னர், போலீஸ் அவரை பாதுகாப்பாகக் காவலில் வைத்ததாகத் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிக்சூடு நடத்திய, ராம்பக்த் கோபால் என்று அடையாளம் காணப்பட்ட, அந்த நபர், பெரிய அளவிலான ஒரு படுகொலையை நடத்துவதற்காகத் தயாராக ஜாமியா பகுதிக்கு வந்ததாகத் தெரிகிறது.

அவர் தனது ஃபேஸ்புக் பயோவில், “எனது பெயர் ராம்பக்த் கோபால். பயோவுக்கு இது போதும். மற்றவை, நான் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். வியாழக்கிழமை பிற்பகலில் அவரது முகநூல் இடுகைகளில் ஒன்று, “ஷாஹீன் பாக். உன் விளையாட்டு முடிந்து விட்டது“, என்று தெரிவித்த்து.

இதற்கு முந்தைய மற்றொரு இடுகையில், அவர் ஒத்த கருத்துடைய இந்துத்துவ வெறியருக்கு இவ்வாறு சவால் விடுத்திருந்தார்: “உங்கள் முகநூல் பின்தொடர்பவர்களில் பாதி எண்ணிக்கை எனக்கிருந்தால் கூட, நான் எப்போதோ ஷாஹீன் பாக் ஐ ஜாலியன் வாலா பாக் ஆக மாற்றியிருப்பேன்.“

ராம்பக்த் கோபாலை கைது செய்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஜாமியா பகுதியில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, “இதோ உங்கள் சுதந்திரம்“, என்ற கூச்சலுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய அதே வேளை, “டெல்லி போலீஸ் ஜிந்தாபாத்“, இந்துஸ்தான் ஜிந்தாபாத்“, ஆகிய கோஷங்களையும் அந்நபர் முழங்கியதாகத் தெரிகிறது.

இத்தகைய துணிச்சலான பயங்கரவாதச் செயல் கண்முன்னே நடந்தேறியும் துளியும் பதட்டப்படாமல் காவல்துறையினர் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதுஇ பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டில் இதே தேதியில் ஒரு இந்துத்துவ பயங்கரவாதியான நாதுராம் கோட்சே வால் படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் இச்சம்பவமும் நடந்தேறியுள்ளது. நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் இச்சம்பவமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.