நியூயார்க்

மெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு இந்து சாமியார் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள கிளென் ஓக்ஸ் பகுதியில் ஒரு சிவசக்தி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை இந்திய வம்சாவழியை சேர்ந்த சாமியாரான ஹரீஷ் சந்திர பூரி என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் காலை 11 மணி அளவில் தனது காவி உடையுடன் கோவிலில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் தெருவில் நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த ஆயுதம் மூலம் தாக்கி உள்ளார்.

இதனால் காயமடைந்த சாமி ஹரீஷ் சந்திர பூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்த 52 வயதான செர்ஜியோ கோவிலா என்பவர் கைது செய்யபட்டுளார். அவரை தாக்கிய போது செர்ஜியோ இது எனது நாடு எனக் கூறி தாக்கியதாக சாமியாரின் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த சாமியாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் நடைபெறும் இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டரில் அமெரிக்க நாடு அமெரிக்க மக்களுக்கே எனவும் பிறநாடுகளில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்து வரும் மக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்னும் வகையிலும் பதிவுகள் இட்டிருந்தார். இதனால் இனக்கலவரம் உண்டாகும் என பலர் அவரை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.