சென்னை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன், மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் என பலரை கொரோனா பலி வாங்கி உள்ளது.

இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனுக்கு கடந்த 27 ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி ஆனதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

ராமகோபாலன் கொரோனா தாக்குதலால் உயிர் இழந்துள்ளதால் அவர் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

ராமகோபாலனுக்கு தற்போது 94 வயதாகிறது.