டிடிவி கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா…

Must read

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நீடித்து வரும் நிலையில், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதற்கிடையில்,  தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி,  உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  அவர்  மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த   28ஆம் தேதி ராயபேட்டையில், அமமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிலையில், பழனியப்பனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

More articles

Latest article