சென்னை:

பத்மாவத் திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தை வெளியிட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த படம் வெளியிடப்பட்டது. இதனால் இந்த படம் வெளியான சினிமா தியேட்டர்களின் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எனினும் வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த வகையில் இந்து மக்கள் கட்சி இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. போராட்டங்களிலும் அக்கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பத்மாவத் திரைப்படத்தை அக்கட்சியினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

இதில் இந்து மக்கள் கட்சியினர் திருப்தி அடைந்துள்ளனர். ராணி பத்மாவதிக்கு காணிக்கை செலுத்தும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]