டில்லி

ஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட தனது மகனின் நினைவுக்காக ஒரு இந்து இஃப்தார் (ரம்ஜான் விருந்து) நடத்தி உள்ளார்.

டில்லி நகரைச் சேர்ந்தவர் யஷ்பால் சக்சேனா.  இவருடைய மகன் அன்கிட் சக்சேனா (வயது 23) ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார்.   இவர் வெகுநாட்களாக இஸ்லாமியப் பெண் ஒருவரை காதலித்து வந்தார்.    இதற்கு அந்தப் பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இருவரும் தங்கள் காதலை கைவிடத் தயாராக இல்லை.

அன்கிட் சக்சேனா

இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் அன்கிட் சக்சேனாவை கடந்த பிப்ரவரி மாதம் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.    இதில் யஷ்பால் சக்சேனா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.   ஆயினும் அவர் இஸ்லாமியகளை  வெறுக்கவில்லை.   தனது மகனின் நினைவாக இஃப்தார் என்னும் ரம்ஜான் விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இது குறித்து யஷ்பால் சக்சேனா, “டில்லி மாநகரில் நான் வசிக்கும் ரகுவீர் நகரில் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரம்ஜான் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளேன்.   என் மகன் அன்கிட் நினைவாக நடத்தப்படும் இந்த விருந்தால் இரு சமுதாயத்தினர் இடையே ஒற்றுமை வளர வேண்டும் என நம்புகிறேன்.   உடனடியாக ஒற்றுமை ஏற்படும் என நான் நினைக்கவில்லை.  ஆனால் ஒற்றுமைக்கு இது முதல் அடியாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.