இஷா குப்தாவுக்கு போட்டியாக மற்றொரு இந்தி நடிகை கல்கி கொச்லின் தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஆம்.. இந்தி நடிகைகள் சிலர், தங்கள் டூ பீஸ் படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அடுத்த கட்டமாக (?) முழு நிர்வாண படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.
சமீபத்தில் இந்தி நடிகை இஷாகுப்தா தனது கவர்ச்சிப் படங்களை இணையதளத்தில் பதிவிட்டார். ஓவராக இருந்ததால் ரசிகர்கள் பலர் அவரைக் கடுமையாக சாடினர். ஆனால் அவரோ கூலாக, அடுத்து தனது நிர்வாண படங்களை வெளியிட்டார்.
அதோடு, “நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கின்றன. நான் எனது கவர்ச்சிப் படங்களை வெளியிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. பிடிக்காவிட்டால் பார்க்காமல் இருங்கள். தவிர இந்த படங்களை வைத்து இந்திய அளவில் என்னைப் பற்றிப் பேச வைத்த அனைவருக்கும் நன்றி’ என்று கிண்டலாக தெரிவித்தார்.
இப்போது இஷா குப்தாவுக்கு போட்டியாக மற்றொரு இந்தி நடிகை கல்கி கொச்லின் இப்போது தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘உங்கள் நிர்வாண உடலை நேசியுங்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இவர் தமிழில் யார் இவன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்!
(“அந்த” படங்களை நாம் வெளியிடவில்லை!)