அசாம்:
ஸ்ஸாமின் அடுத்த முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. மட்டும் 60 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பா.ஜ.க. அம்மாநிலத்தில் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதால் பா.ஜ.க. உடனே ஆட்சியமைக்கும் வேலையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வரை தேர்நதெடுப்பதில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் எழுந்துள்ளது. தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவாலுக்கு நல்ல இமேஜ் கொண்ட தலைவராக கருதப்படுகிறார். மேலும் அசாமின் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் கட்சிக்கு பலம். அதேவேளையில், வலுவான நிர்வாக திறன் மற்றும் மக்களிடம் முறையிடவும் தற்போது அமைச்சராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை முதல்வராக தேர்வு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும் என்று அசாம் பா.ஜ.க.வில் ஒரு தரப்பினர் கருதினர்.

இந்நிலையில், அஸ்ஸாமின் அடுத்த முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.