டெல்லி: ராகுல்காந்தியுடன் 100வது நாள் யாத்திரையில் கலந்துகொண்ட இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் கடந்த 11ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, அவர் கடந்த கடந்த 16 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற ராகுல்காந்தியின் 100வது நாள் பாத யாத்திரையில் கலந்து கொண்டார். அவருடன் துணைமுதல்வர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து அவர் பிரதமரை சந்திக்க டெல்லி திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், சுக்விந்தர் சிங் சுகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பிரதமரை சந்திக்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன
[youtube-feed feed=1]