சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கடந்த 5தேதி காலமானார். அவரது விட்டுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் ஷியாம் சரண் நேகி தனது 106 வயதில் கடந்த 5ந்தேதி காலமானார். இவர் இமாசலப் பிரதேச மாநிலத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள கல்பா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 1975 இல் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். 1952 பொதுத் தேர்தல் களில் வாக்களித்த முதல் நபராக அவர் இருந்தார், இதுவரை 34 முறையான தனது வாக்கினை செலுத்தி சாதனை படைத்துள்ள நேகி, 12ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தனது தபால் வாக்கையும் பதிவு செய்துள்ளார். தனது வாழ்நாளில் இதுவரை ஒருமுறைகூட, வாக்களிக்கும் வாய்ப்பை தவறவிட்டதில்லை.
நேகி மறைவுக்கு அனைத்து தரப்பு அரசிய கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையமும் இரங்கல் தெரிவித்தது.
இநத் நிலையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், 106வது வயதில் காலமான இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகியின் இல்லத்துக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, தான் நேகிக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், நேகி எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களை வாக்களிக்க தூண்டினார் என புகழாரம் சூட்டினார்.