டில்லி

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இமாசலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுக்வீந்தர் சிங் சுகு இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்வராகப் பதவியில் உள்ளார்.. சுக்விந்தர் சிங் சுகு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை 11.20 மணிக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

தமக்கு கடும் வயிற்று வலி இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, இரைப்பை கடலியல் துறை மருத்துவப் பேராசிரியர் பிரமோத் கர்க் தலைமையிலான மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர் லேசான கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]