பனாஜி: மலையை வெட்டுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று கோவா நகரமைப்பு மற்றும் கிராமப்புற திட்டமிடல் அமைச்சர் விஸ்வஜித் ரானே அறிவித்து உள்ளார். இதையடுத்து,,மலைகளை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என் றுகோவா பச்சாவ் அபியான் (ஜிபிஏ) தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டு, மலைகள், நீர் நிலைகள், ஆற்று மணல்கள் போன்றவை கொள்ளையடிக்கப்படுவதை  தடுக்கும் வகையில், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுமா? தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என சமூக வலைதளங் களில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மலைகள் போன்ற இயற்கை வளங்களை சூறையாடுவதால், நிலச்சரிவு மட்டுமின்றி வன விலங்குகள் புகலிடம் தேடி அலைகிறது. இதனால், பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவா மாநில பாஜக அரசு  மலையை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று  அறிவித்து உள்ளது.

இதுகுறித்து பேசிய கோவா நகரமைப்பு மற்றும் கிராமப்புற திட்டமிடல் அமைச்சர் விஸ்வஜித் ரானே இதற்காக TCP சட்டத்தில் ‘கெட்அவே’ திருத்தம் 39A அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

‘சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கடந்த 6 மாதமாக மாநிலத்தில் மலைகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதையும் மீறி சட்டவிரோதமாக மலையை வெட்டி பாறை, மணல் எடுப்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன. வெட்டப்படும் நிலத்தை பொறுத்து ₹1 லட்சம் முதல் ₹1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்.

வயநாடு சோகம் தற்காலிக திட்டமிடல் மற்றும் சட்டவிரோத செயல்களின் விளைவுகளைக் காட்டியுள்ளது, கோவாவின் பலவீனமான மலைப்பாங்கான இடவியல் வளர்ச்சி இப்போது அதைப் பின்பற்ற வாய்ப்புள்ளது என்று  தெரிவித்துள்ளார்.

இதை கோவா பச்சாவ் அபியான் (ஜிபிஏ)  உறுதி செய்துள்ளது.  மலைகளை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று  தெரிவித்துள்ளது. மறுசீரமைப்பு  என்பது அபராதத் தொகையை செலுத்தியவுடன், மீறலை சட்டப்பூர்வமாக்குவதற்கு அபராதம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும்  குறிப்பிட்டுள்ளது.