2014 ஆம் ஆண்டில் சர்வதேச பெட்ரோல் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 140 டாலர்!

அப்போது டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 65 மட்டுமே!

அதன் பிறகு பொறுப்பு ஏற்ற நரேந்திர மோடி ஆட்சியில் சர்வதேச கச்சா எண்ணெய் படிப்படியாக 40 டாலர்..30…20..எனக் குறைந்து ஒரு கட்டத்தில் மைனஸ் டாலருக்கும் கீழே குறைந்தது!

ஆனால்… பெட்ரோல் விலை 115 ரூபாய் வரை கடுமையாக உயர்ந்தது!

இதனால் நடுத்தர… எளிய மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அடைந்து வருகிறார்கள்!

ஆனால், தமிழகத்தில் பெட்ரோல் 3 ரூபாய் குறைத்து மக்களின் சுமையைக் கொஞ்சம் குறைத்தது!!

இச்சூழலில், நாடெங்கும் பல மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் பா. ஜ. க படுதோல்வி அடைந்துள்ளது!

இதனால் அதிர்ச்சி அடைந்த ஒன்றிய பா. ஜ. க. அரசு…பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் குறைத்துள்ளது!

உடனடியாக, தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை, ” நாங்கள் விலையைக் குறைத்து விட்டோம்! இங்கே ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? ” என்று எகிறிக் குதிக்கிறார்!

மக்களோ, ” காங்கிரஸ் ஆட்சியில் 65 ரூபாய் விற்றதை 115 ரூபாய் வரையில் ஏற்றி விட்டு.. அதில் வெறும் 10 ரூபாய் மட்டும் குறைத்து விட்டு, பெருமை வேறு அடித்துக் கொள்கிறார்களே?”
என்று கூறிச் சிரிக்கிறார்கள்!!!!

—– ஓவியர் இரா. பாரி.