ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தொடரும் போராட்டத்தின் போது கர்நாடகாவின் ஷிமோகா பாபுஜி நகரில் உள்ள அரசு கல்லூரியில் உள்ள கொடி கம்பத்தில் மாணவர்கள் சிலர் நேற்று காவி கொடியை ஏற்றினர்.

இது கர்நாடகா மாநிலம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை பாபுஜி நகரில் உள்ள அரசு கல்லூரிக்குள் நுழைந்த இந்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினர்.

https://twitter.com/scribe_prashant/status/1491266898616795144

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க மாவட்ட தலைவர் விஜய் குமார் மற்றும் மாநில செயலாளர் பாலாஜி தலைமையில் சென்ற மாணவர் அமைப்பினர் அங்கு தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடினர்.

தேர்தல் நேரங்களில் நாட்டின் பிற பகுதிகளில் இதுபோன்ற மத வன்முறையை தூண்டி ஆதாயம் தேடும் அமைப்புகளை இந்திய தேசிய மாணவர் சங்க நிர்வாகிகள் வன்மையாக கண்டித்ததோடு, மாணவர்களை தங்களின் அரசியலுக்கு பகடைக்காயாக உருட்டும் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.