சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் துறை ( பொதுப்பணித்துறை) மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், பட்ஜெட்மீதான விவாதங்கள் முடிவடைந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நlத்தப்பட்டு வருகின்றன.
மார்ச் 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் கடந்த 28ம் தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள், வனம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக்கோரிக்கை நடந்தது. இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு, மற்றும் ரம்ஜான் விடுமுறை என 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடி உள்ளது.
இன்றைய அமர்வில், வழக்கமான நடைமுறைகளை அடுத்து, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். தொடர்ந்து துறைரீதியான மானியக்கோரிக்கை நடைபெறும்.
இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை) மீதான விவாதம் நடக்கிறது. இதுதொடர்பான விவாதத்தில் அனைத்து அரசியல் கட்சி எம்எல்ஏக்கள் பேச அனுமதி வழங்கப்படும். இதையடுத்து மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுவதுடன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.