சென்னை

மிழ் நாட்டின் வடக்கு மாவட்டங்களில்அதிக வெப்ப நிலை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களிலும் மழை பெய்து வருவதாக செய்திகள் வருகின்றன.    அதே நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல வட தமிழகத்தில் வெப்பம் கடுமையாக உள்ளது.   இன்று சென்னை வானில ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “வங்கக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்கிறது.   மேலும் அரபிக் கடலின் தென் கிழக்கில் நிலவி வந்த காற்றழுத்தப் பகுதி வலுவிழந்துள்ளது.   இதனால் கோவை, கொடைக்கானல்  மற்றும் தூத்துக்குடி பகுதிகலில் மழை பெய்துள்ளது.

தற்போது மேற்கு திசையில் இருந்து ஈரப்பதம் குறைந்த காற்று வீசுவதால் வட தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.    இந்தப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பம் உள்ளது.   இன்னும் இரு தினங்களுக்கு இது நீடிக்கும்.   தமிழக வட மாவட்டங்களான சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் இருக்கும்” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.