சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு டிசம்பர் 27ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி சேலம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மோசடி, முறைகேடு வழக்கு தவிர சாதியை குறிப்பிட்டு திட்டியதாக ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் மீது எந்தவொரு விசாரணையும் இன்றி சேலம் 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உடனடியாக ஜாமீன் வழங்கியது சர்ச்சைக்குள்ளானது.
இது தொடர்பாக துணை வேந்தர் ஜெகநாதனின் ஜாமினை ரத்து செய்யக்கோரி சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, ஜாமின் வழங்கிய மாஜிஸ்திரேட்டு, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமின் வழங்கியது குறித்து சேலம் மாஜிஸ்திரேட் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.