சென்னை:

ளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இசைஅமைப்பாளர் இளையராஜா, தான் இசை அமைக்கும் பாடல்களுக்கு ராயல்டி வேண்டும் என்று உரிமை கோரினார். மேலும், தனது பாடல்களை மேடையிலோ, சமூக வலைதளங்களி லேயே தனது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்குரிய வி‌ஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும் என்று கூறியிருந்தார்.   இது பரபரப்பை ஏற்படுத்தியது.

படத்தயாரிப்பாளர்கள் இளையராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். மேலும்,   இளையராஜா பாடல் வெளியிட உரிமை பெற்றுள்ள அகி மியூசிக் நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம்,  கிரி டிரேடர்ஸ் போன்ற  நிறுவனங்கள் இளையராஜா தனது பாடல்களை பயன் படுத்தக்கூடாது என எடுத்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி சென்னை  உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழங்கு தொடர்ந்தன.

இந்த வழக்கின் விசாரணையின்போது, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அதில்  ‘இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அகிநிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

ராயல்டி விவகாரத்தில் இளையராஜாவுக்கும், எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கும் இடையே பிரிவு ஏற்பட்டு தற்போது மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.