சென்னை: பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டடமாக கேள்வி எழுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர்  கல்யாணராமன், இவர் பாஜக உறுப்பினர். சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு எதிரானவர்களையும், திமுக மற்றும்  இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதுதொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் சாஹிர்கான்  கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.2021ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர்மீது பலர் புகார் அளித்தனர். அதன்படி பல வழக்குகள் அவர்மீது பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. இதையடுத்து,  தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாண ராமன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்யாணராமனின் மனுவை விசாரித்த நீதிபதிகள், கல்யாணராமன்  சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? என்று  நீதிபதி கேள்வி எழுப்பினர்.  மேலும், கல்யாணராமன் நீதிமன்றம், சட்டம் மற்றும் போலீசாரை மதிக்கமாட்டாரா..? என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  மனு மீது சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.