சென்னை:

வாடகை பாக்கி குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காத  திருவள்ளூர் ஆட்சியர், மாதவரம் தாசில்தார் , வருவாய்துறை செயலாளர்  ஆகியோருக்கு ஊதியம் வழங்க சென்னை உயர்நீதி மன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை மாதவரத்தில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் தனியாருக்கு சொந்தமான கட்டிடமாகும். இந்த கட்டித்தின் சொந்தக்காரர் பரிதா சவுகத் என்பவர். இந்த கட்டித்திற்கான வாடகை கடந்த ஆண்டிலிருந்து கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பல முறை முறையிட்டும் வாடகை தராததால் பரிதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில்  கட்டட உரிமையாளருக்கு   வாடகை பாக்கி தராமலும், புதிய வாடகை ஒப்பந்தம் போடாமலும் இழுத்தடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறை செயலாளருக்கு, தாசில்தாருக்கு  நடப்பு மாத சம்பளத்தை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டின் அதிரடி தீர்ப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம்  வாடகை பாக்கி குறித்து உடனடி நடிவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.