சென்னை:
கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய ரூ. 2,390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஆண்டு வாடகை ரூ. 540 கோடியாகவும், நாள் ஒன்றுக்கு ரூ. ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.