சென்னை
தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட்டில் ஒரு கும்பல் கொள்ளை அடித்த்து. அப்போது அங்கு காவலராக இருந்த ஓஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலர் தாக்கபட்டார். அதன் பிறகு ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
கொடநாடு எஸ்டேட் பணியாளரான சயன் ஒரு விபத்தில் சிக்கி தப்பினார். ஆயினும் அவர் குடும்பத்தினர் மரணம் அடைந்தனர். இந்நிலையில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யு சாமுவேல் வெள்யிட்ட வீடியோவில் சயன் மற்றும் மனோஜ் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் இந்த கொள்ளை மற்றும் மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார். அத்துடன் மேத்யு தனது பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுவதாகவும் தமக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் சென்னை உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மேத்யு, சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச தடை விதித்துள்ளது.